ரத்தத்தால் என்னை காப்பாற்றுங்கள் என பாத்ரூம் சுவரில் எழுதி வைத்த பெண் காணவில்லை...

தமிழ்ச்செல்வியின் கணவர் ஹரிஹரன் மற்றும்  விமல் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்தத்தால் என்னை காப்பாற்றுங்கள் என பாத்ரூம் சுவரில் எழுதி வைத்த பெண் காணவில்லை...
ரத்தத்தால் என்னை காப்பாற்றுங்கள் என சுவற்றில் எழுதிய பெண்
  • News18
  • Last Updated: August 28, 2019, 12:45 PM IST
  • Share this:
சேலத்தில் வீட்டின் குளியலறையில் ரத்தத்தால் தன்னை காப்பாற்றுங்கள் என எழுதிவைத்த பெண், காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள சந்திரா கார்டன் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. ஹரிஹரன் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் வீட்டின் குளியலறையில் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ரத்தத்தினால் "விமல் ஆளுங்க... காப்பாற்றுங்கள் ஹரி..." என்று தன் மனைவி ரத்தத்தால் எழுதி இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அவர்  புகார் கொடுத்துள்ளார். அந்த அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஹரிஹரனிடம் விசாரணை நடத்தினர்.


மேலும் குளியலறையில் இரத்தத்தினால் எழுதப்பட்ட வாசகங்கள் மற்றும் ரத்தக்கறை படிந்த ஹாக்கி மட்டை ஆகியவை வீட்டில் கிடந்ததன் அடிப்படையில் தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு தடயங்களும் பதிவு செய்யப்பட்டன.  ஜவுளி தொழில் செய்துவரும் ஹரிஹரனிடம் பணியாற்றி வருபவர் விமல். இந்த நிலையில் விமல் பெயரை குறிப்பிட்டு குளியலறையில் எழுதி இருப்பது பல்வேறு சந்தேகங்களை காவல் துறையினருக்கு ஏற்படுத்தியது.

அதனடிப்படையில் தமிழ்ச்செல்வியின் கணவர் ஹரிஹரன் மற்றும்  விமல் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.Also see... வேலை தருவதாகக் கூறி படுக்கைக்கு அழைத்தவருக்கு தர்ம அடி
First published: August 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading