தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டறிந்து பேசியிருக்கலாம் - டிடிவி தினகரன்

தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டறிந்து பேசியிருக்கலாம் - டிடிவி தினகரன்
ரஜினி
  • Share this:
பெரியார் விவகாரத்தில் தமிழருவி மணியன் போன்றோரிடம் விவரம் கேட்டறிந்து ரஜினி பேசியிருக்க வேண்டும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரியது. தமிழர் நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த மாபெரும் தலைவர் பெரியார் குறித்து பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து உண்மை தன்மை கேட்டறிந்து பேசியிருக்கலாம்

கடவுள் மறுப்பிற்கு எதிரானவர்கள் கூட பெரியாரை மதிப்பவர்கள் தான். தந்தை பெரியார் ஒரு சமூக நீதி போராளி, பெண்ணுரிமை போராளி என தெரிவித்தார்.


மேலும் , பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் முனைப்போடு செயல்பட வேண்டும் என தெரிவித்த அவர் நானோ, சசிகலாவோ துரோகிகளோடு ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வருவது குறித்து பேசிய அவர், சட்ட ரீதியிலான முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Also see:
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading