Home /News /tamil-nadu /

ஆப்பிள் திருட்டு வழக்கில் ஜாமின்: தற்போது தக்காளி திருட்டு- விசித்திர கொள்ளையன் கைதானது எப்படி

ஆப்பிள் திருட்டு வழக்கில் ஜாமின்: தற்போது தக்காளி திருட்டு- விசித்திர கொள்ளையன் கைதானது எப்படி

தக்காளி திருடன்

தக்காளி திருடன்

சேலம் மாவட்டத்தில் பேருந்துக்கு காத்திருப்பது போன்று காய்கறிகடைகளில் இருந்து தக்களி பெட்டிகளை மட்டும் திருடி சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை கிடு கிடு வென உயர்ந்தது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது .

    இந்தநிலையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியல் காய்கறிக்கடை ஒன்று உள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டியே கடை உள்ளதால் கடைக்கு நள்ளிரவு வரும் மொத்த காய்கறியை வாசலில் இறக்கிவைப்பது வழக்கம்.

    இந்நிலையில் கடந்தவாரம் கடையின் வாசலில் நள்ளிரவு நேரத்தில் மொத்த சரக்கையும் இறக்கிவைத்துவிட்டு தக்காளி பெட்டியையும் அதனுடனே இறக்கி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

    காலையில் வந்து பார்த்த போது மூன்று தக்காளி பெட்டியில் இரண்டு தக்காளிபெட்டி மட்டுமே இருந்ததை கண்டு வியாபாரி அதிர்ச்சியடைந்துள்ளார் .

    உடனே கடை வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிகாலை நேரத்தில் கடையின் வாசலில் இருசக்கர வாகனத்தில் வந்து கடையின் வாசலில் நிற்பது பதிவாகியிருந்துள்ளது. டிப்டாபாக கடையின் வாசலில் நின்றவர் அங்கும் இங்கும் என சிறிது நேரம் நோட்டம் விடுகிறார் .

    யாரும் இல்லை என்பதை உறுதி செய்தவுடன் படார் என்று கடையின் வாசலில் இருந்த தக்காளி பெட்டி ஒன்றை தனது பைக்கில் ஏற்றியவர் சிட்டாக பறந்தார். இந்த காட்சிகளின் அடிப்படையில் கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    வாகன பதிவு எண் அடிப்படையில் நடத்திய விசாரணையில் வெண்ணந்தூர் தங்கசாலை வீதியை சேர்ந்த 32 வயதான சின்ராஜ் என்பவரை போலீசார் பிடித்தனர் .

    இவர் ஏற்கனவே சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆப்பிள் திருடிய வழக்கில் கைதாகி தற்போது தான் ஜாமீனில் வெளியே வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அதே பாணியில் இவர் தான் தக்காளி பெட்டியை திருடியதும் விசாரணையில் அம்பலமானது. வீடு புகுந்து அடித்து திருடுவது கடினமானதாக இருப்பதால் இது போன நூதன திருட்டில் ஈடுபடுவதாக சின்ராஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .

    ஆப்பிள் திருட்டு வழக்கில் ஜாமினில் வந்தவரை மீண்டும் தக்காளி திருட்டு வழக்கில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Salem

    அடுத்த செய்தி