திருப்பூர்: ஓட்டுநர், சுற்றுலா சென்ற மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..!

அவிநாசி போலீசார் ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக காயமடைந்த 2 மாணவர்களை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: ஓட்டுநர், சுற்றுலா சென்ற மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..!
அவிநாசி போலீசார் ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக காயமடைந்த 2 மாணவர்களை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Share this:
சேலத்தில் இருந்து ஊட்டிக்கு காரில் பயணம் செய்த 8 பேரில் ஓட்டுநர் உட்பட 6  பேர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சேலத்தில் இருந்து டவேரா காரில் விநாயக கல்லூரியை சேர்ந்த 7 கல்லூரி மாணவர்கள் ஓட்டுநருடன் ஊட்டிக்கு  சுற்றுலா சென்றனர். சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை திருப்பூர் மாவட்டம் பழங்கரை அருகே கார் சென்று கொண்டிருந்த போது முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது சற்றும் எதிர்பாராமல் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரில் 5 மாணவர்கள் உட்பட ஓட்டுநர் மணிகண்டனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி போலீசார் ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக காயமடைந்த 2 மாணவர்களை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


காரில் வந்த மாணவர்களின் விபரம்:

தர்மபுரியை சேர்ந்த சந்தோஷ் , கோவையை சேர்ந்த கார்த்தி,
கள்ள குறிச்சி ராஜேஸ், சூர்யா, வெங்கட், சின்னசேலம் இளவரசன், வசந்த் மற்றும் கார் டிரைவர். இதில் ராஜேஸ், சூர்யா, வெங்கட், இளவரசன், வசந்த்மற்றும் கார் டிரைவர் மணிகண்டன் இறந்தனர்.

Also see... 
First published: March 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading