குப்பைகளை தரம் பிரிக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது - சேலத்தில் மக்கள் போராட்டம்!

உரம் தயாரிக்கும் மையத்தை சுற்றி குடியிருப்புகள் அமைந்துள்ளதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறும் பொதுமக்கள், இதனால் பல்வேறு நோய்களும் பரவுவதாக கூறுகின்றனர்.

news18
Updated: April 24, 2019, 1:13 PM IST
குப்பைகளை தரம் பிரிக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது - சேலத்தில் மக்கள் போராட்டம்!
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
news18
Updated: April 24, 2019, 1:13 PM IST
சேலம் பெரமனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை வேறு பகுதிக்கு மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரமனூர் காட்டுவளவு பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் போது, மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உரம் தயாரிக்கும் மையத்தை சுற்றி குடியிருப்புகள் அமைந்துள்ளதால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறும் பொதுமக்கள், இதனால் பல்வேறு நோய்களும் பரவுவதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில், உரம் தயாரிக்கும் மையத்தை குடியிருப்புகள் இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென கோரி போராட்டம் நடைபெற்றது. உரம் தயாரிக்கும் மையத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Also see...

First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...