ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''நண்பர் ரூ.1 கோடி கொடுத்தார்.. இப்போ காணோம்'' - கரும்புத்தோட்டத்தில் தெளிவான பூச்சாண்டி கதை!

''நண்பர் ரூ.1 கோடி கொடுத்தார்.. இப்போ காணோம்'' - கரும்புத்தோட்டத்தில் தெளிவான பூச்சாண்டி கதை!

கைதானவர்

கைதானவர்

சேலம் தலைவாசல் அருகே ஒரு கோடி ரூபாய் கொள்ளை போனது தொடர்பாக, வீட்டின் உரிமையாளரே பணத்தை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் சாமியார் கிணறு பகுதியை சேர்ந்த விவசாயி லோகநாதன் என்பவரிடம், அவரது நண்பரும் ரியல் எஸ்டேட் தொழில் அதிபருமான கோபாலகிருஷ்ணன், இரண்டு கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை கொடுத்து வைத்திருந்தார். தலா ஒரு கோடி வீதம் இரண்டு பைகளில் பணம் வைத்திருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி லோகநாதன் தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோயிலுக்கு சென்றார்.

பின்னர், வீடு திரும்பிய போது தனது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தலைவாசல் போலீசார், லோகநாதனுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்துடன் கூடிய பையை கைப்பற்றினர்.

இதையும் படிங்க: ”உதயநிதி படத்தை பார்க்க சொல்லாதீங்க” விஜய்யின் வாரிசு படம் குறித்து மறைமுகமாக பேசிய அண்ணாமலை!

மேலும், லோகநாதன் மற்றும் கோபாலகிருஷ்ணனிடம் பணம் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பணத்தாசையில் ஒரு கோடி ரூபாயை தனது கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்துகொண்டு, கொள்ளை போனதாக லோகநாதன் நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Salem