சேலம் அருகே சுட்டெரித்த வெயிலை பொருட்படுத்தாமல் பொறுமையாக வரிசையில் காத்திருந்த குடிமகன்கள்...!

காத்திருந்த குடிமகன்கள்

சேலம் மாவட்டத்தில் சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல், குடிமகன்கள் வரிசையில் பொறுமையாக அமர்ந்து காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

  அதன்படி, காலை 10 மணிக்கு விற்பனை தொடங்கியது. எனினும், சில இடங்களில் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே விற்பனை தொடங்கப்பட்டது.

  நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மதுவை வாங்கிச்சென்றனர். ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

  44 நாட்களுக்குப் பிறகு மது பாட்டில்களை வாங்கிய குடிமகன்கள் மகிழ்ச்சியுடன் வெளியேறினர். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காட்டினாலே மது பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.

  சேலம் மாவட்டம் மேட்டூரில் மாதையன் குட்டை, தெர்மல், காவேரி கிராஸ் ஆகிய பகுதிகளில் தடை காரணமாக மதுக்கடைகள் திறக்கப் படவில்லை. புதுச் சாம்பள்ளி மதுக்கடையில் 300 -க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் காலையிலேயே வந்திருந்தனர். இவர்கள்
  கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பள்ளி மாணவர்கள் போல் ரோட்டில் வரிசையில் சமூக இடை வெளி விட்டு
  அமைதியாய் அமர்ந்து காத்திருந்தனர்.

  டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டாலும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் வரும் பகுதிகளில் கடைகள் திறக்கப்படாது.

  டாஸ்மாக் கடைகளில் உரிய பாதுகாப்பு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும். கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

  அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 50 வயதுக்கு மேலானவர்களுக்கும், பகல் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயதானவர்களுக்கும், 3 மணி முதல் 5 மணி வரை 40 வயதுக்கு கீழானவர்களுக்கும் மது விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  படிக்க: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை விபரங்கள் வெளியீடு - முழு பட்டியல்
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  nbsp;

   
  Published by:Sankar
  First published: