தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது - முதல்வர் குற்றச்சாட்டு

"ஊரடங்கால் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளது, இதனை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”

தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது - முதல்வர் குற்றச்சாட்டு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: May 23, 2020, 1:54 PM IST
  • Share this:
தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க மறுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், குடிமராமத்து பணிகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டார். தமிழகம் தேசிய அளவில் கொரோனா தடுப்பு பணியில் முதன்மை மாநிலமாக இருப்பதாகவும் கூறினார்.


கொரோனா தடுப்பு பணிக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், ஊரடங்கால் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளதாகவும், இதனை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புகாரில் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு ஸ்டாலின் எதற்காக அரசைக் கண்டித்து அறிவிக்கை வெளியிடுகிறார்? பொய் புகார் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கின்றனர் என்றும் முதல்வர் கூறினார்


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading