சேலத்தில் சுயமரியாதைத் திருமணம் செய்த காதல் ஜோடி கடத்தல்!

கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கொளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் சுயமரியாதைத் திருமணம் செய்த காதல் ஜோடி கடத்தல்!
செல்வன் - இளமதி
  • Share this:
சேலம் அருகே சுயமரியாதைத் திருமணம் செய்த காதல் ஜோடிகள் தாக்கப்பட்டு, கடத்தப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் நேற்று திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுமயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் காதல் ஜோடிகளை கடுமையாக தாக்கி, காரில் கடத்தி சென்றுள்ளனர்.


இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று ஈஸ்வரன் மற்றும் காதலர் செல்வனை மீட்டனர். காதலி இளமதியை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கொளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also see...
First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading