தருமபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன். ஆடிட்டராக உள்ள இவர் சுமார் 4,000 சதுர அடி பரப்பளவில் ஒன்றரை ஆண்டாக கனவு இல்லம் ஒன்றைக் கட்டி வருகிறார். 5 சதவீத சிமெண்ட் மட்டும் பயன்படுத்திவிட்டு 95 சதவீதம் மண் மற்றும் மர வேலைப்பாடுகளுடன் கலை நயத்துடன் கனவு இல்லத்தைச் செதுக்கியுள்ளார் மணிகண்டன்.
மழைநீர் சேகரிப்புத் தொட்டி, வீட்டைச் சுற்றி அகழி என அப்பகுதி வழியாகச் செல்வோரை ஒரு நிமிடம் நின்று ரசிக்க வைக்கிறது மணிகண்டனின் வீடு. வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள அகழிகளில் அழகிய மீன்கள் வளர்க்கப்படுகின்றன. ஏசி இல்லாமல் கோடைக்காலத்திலும் குளு குளு குளிர்ச்சி அளிக்கும் வகையில் மூங்கில்களைக் கொண்டு இந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது.
Also read: கோவையில் பட்டாசு விற்பனை மந்தம் - விற்பனையாளர்கள் வேதனை
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பாரம்பரியம் மிக்க பொருட்களை வரவழைத்து வீடு கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டின் வாசல் மற்றும் ஜன்னல்கள் காரைக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. மழைநீரைச் சேகரிக்க 20,000 லிட்டர் கொள்ளளவு நிலத்தடியில் டேங்க், வீட்டில் பயன்படுத்தப்படும் கழிவுநீரை இயற்கை முறை சுத்திகரிப்பான் உள்ளிட்டவற்றை அமைத்து அசத்தியுள்ளனர்.
நீண்ட கால திட்டங்களான மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை உள்ளிட்ட அமைப்புகளுடன் கட்டப்பட்டுள்ள வீட்டின் உரிமையாளரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri, Rain Water Harvesting