சாலையோரம் படுத்து உறங்கும் முதியவர்களைக் கல்லைப் போட்டு கொலை செய்யும் சைக்கோ! சேலத்தில் அச்சம்

  • Share this:
சேலத்தில் ஆதரவில்லாமல் மாநகராட்சி வணிக வளாகத்தில் படுத்து உறங்கும் முதியவர்களின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் உலவி வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சேலம் பழைய பேருந்துநிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. அதில் செயல்பட்டு வரும் டயர் கடையின் முன்பு முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் நேற்று அதிகாலை உயிரிழந்து கிடந்தார். இந்தக் கொலை குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் முதியவரின் தலையில் கல்லைபோட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட காட்சி பதிவாகியிருந்தது. கொலை செய்த அந்த நபர், முதியவரின் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற சம்பவம் போன்றே இன்றும் பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் பூட்டப்பட்டிருந்த கடையின் முன்பு படுத்திருந்த 85 வயது மதிக்க தக்க முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து அவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை கொலைகாரன் எடுத்துச் சென்றுள்ளான்.


இன்று கொலை செய்யப்பட்ட முதியவர் சேலம் மாநகர் பொன்னமாபேட்டை பகுதிைச் சார்ந்த அங்கப்பன் என்பதும், பூக்கடை, பழக்கடைகளில் கூலி வேலை செய்து வந்த இவர், அவ்வப்போது குழிப்பதற்கு மட்டும் தனது மகன் வீட்டிற்கு சென்று வரும் இவர், இரவு நேரங்களில் பூட்டியுள்ள கடைகளின் முன்பாக உறங்கி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலத்தில் தொடர்ந்து அடுத்து அடுத்து தனியாக கடையின் வாயில் உறங்கும் ஆதரவற்ற முதியவர்களை குறிவைத்து கொலை செய்யும் இந்த கொலை காரனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர்களை குறி வைத்து கொலை செய்யும் இந்த கொலைகாரன் சைகோவாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் கருதப்படுவதால் கொலைகாரனை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

Also see:
First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்