சேலத்தில் காவலர் மனைவி தற்கொலை - வரதட்சணை கொடுமையா?

சேலத்தில் ஆயுதப்படை காவலரின் மனைவி, வாழப்பிடிக்கவில்லை என சகோதரிக்கு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் சந்தேகம் மற்றும் வரதட்சணை கொடுமையால் தற்கொலை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

சேலத்தில் காவலர் மனைவி தற்கொலை - வரதட்சணை கொடுமையா?
சேலத்தில் ஆயுதப்படை காவலரின் மனைவி, வாழப்பிடிக்கவில்லை என சகோதரிக்கு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் சந்தேகம் மற்றும் வரதட்சணை கொடுமையால் தற்கொலை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
  • Share this:
சேலம் மாநகரை ஒட்டியுள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான சீனிவாசன். சேலம் குமாரசாமிப்பட்டியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.

27 வயதான சங்கீதாவுக்கும் இவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.  இந்நிலையில் சீனிவாசனுக்கும் சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் படிக்க...தேனியில் அதிர்ச்சி சம்பவம் - கறிக்கடையில் புகுந்து கத்தியால் தனது கையை துண்டாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர்


மனமுடைந்த சங்கீதா புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகலறிந்து சென்ற கன்னங்குறிச்சி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தற்கொலை சம்பவம் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சங்கீதாவை பணம் மற்றும் நகை கேட்டு அடிக்கடி கணவர் வீட்டார் துன்புறுத்தி வந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு சங்கீதாவிடம் குடும்பச் சொத்தை பிரித்து வாங்கி வருமாறு வற்புறுத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பணம், நகை கேட்டு அடிக்கடி துன்புறுத்தியும், சில நேரங்களில் மனைவியை சந்தேகப்பட்டு அடித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை அதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என சகோதரியின் வாட்ஸாப் எண்ணிற்கு ஆடியோ ஒன்றை அனுப்பிவிட்டு சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சகோதரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading