சேலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு.. பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

4 பேரின் தாக்குதலை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அகமது பாஷா, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

  • Share this:
சேலத்தில் நான்கு பேர் கொடூரமாகத் தாக்கியதில், ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். அதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அகமது பாஷா என்பவரை, கடந்த ஒன்றாம் தேதி அன்று அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட நான்கு பேர், பழைய பேருந்து நிலையம் அருகே வைத்து கொடூரமாகத் தாக்கினர்.தாக்குதலை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அகமது பாஷா, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.இதுதொடர்பாக ஏற்கனவே சதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 
First published: September 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading