சேலத்தில் வறட்சி காரணமாக மாம்பழத்தின் விலை உயர்ந்தது!

கடந்த சில ஆண்டுகளாக சேலம் மாம்பழத்திற்கு பல்வேறு மாநிலங்களிலும் வரவேற்பு அதிகரித்து விட்டதாலும், வரத்து குறைந்து விட்டதாலும், மாம்பழ பிரியர்கள் விரும்பி வாங்கும் மாம்பழ வகைகளை அவர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்பதே வியாபாரிகளின் கவலையாக உள்ளது.

Vaijayanthi S | news18
Updated: May 15, 2019, 11:49 AM IST
சேலத்தில் வறட்சி காரணமாக மாம்பழத்தின் விலை உயர்ந்தது!
சேலத்தில் மாம்பழத்தின் விலை உயர்ந்தது
Vaijayanthi S | news18
Updated: May 15, 2019, 11:49 AM IST
கடும் வறட்சி காரணமாக மாம்பழங்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளதால், சேலத்தில் பழங்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சில்லறை வியாபாரிகளும், மாம்பழ பிரியர்களும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சேலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மாம்பழங்கள்தான். நாவில் நிற்கும் சுவைக்கு பெயர்பெற்ற சேலத்து மாம்பழம் தமிழகம் மட்டுமில்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆனால், நடப்பாண்டு கடும் வறட்சி காரணமாக மாம்பழங்களின் வரத்து குறைந்து விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் வியாபாரிகள். 20 லிருந்து 40 சதவிகித மாம்பழங்கள் வரையே விற்பனைக்கு வருவதாக கூறும் வியாபாரிகள், இதனால், விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

மாம்பழம்


வரத்து குறைந்தாலும் மவுசு குறையாத சேலம் மாம்பழம் ஆன்லைன் விற்பனையில் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. மல்கோவா, செந்தூரா, சேலம் குண்டு, பெங்களூரா போன்ற தங்களது பிடித்த வகை பழங்களை விலையை பற்றி கவலைப்படாமல் ஆன்லைன் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பதாகவே கூறுகின்றனர் ஆன்லைன் விற்பனையாளர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக சேலம் மாம்பழத்திற்கு பல்வேறு மாநிலங்களிலும் வரவேற்பு அதிகரித்துவிட்டதாலும், வரத்து குறைந்துவிட்டதாலும், மாம்பழ பிரியர்கள் விரும்பி வாங்கும் மாம்பழ வகைகளை அவர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்பதே வியாபாரிகளின் கவலையாக உள்ளது.

Also see... குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துக! குடிநீர் வடிகால் வாரியம் வேண்டிகோள்
Loading...

Also see... 

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...