சேலம் மக்களவைத் தொகுதி

16வது மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் 76.73 சதவிகிதம் மக்கள் வாக்களித்துள்ளனர்.

Web Desk | news18
Updated: March 15, 2019, 11:31 AM IST
சேலம் மக்களவைத் தொகுதி
சேலம்
Web Desk | news18
Updated: March 15, 2019, 11:31 AM IST
மாம்பழத்துக்குப் பெயர் பெற்ற சேலம் மக்களவைத் தொகுதியாக 1952-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பின் போது, திருச்செங்கோடு தொகுதியில் இடம்பெற்றிருந்த எடப்பாடி சட்டமன்றத் தொகுதி, சேலம் மக்களவைத் தொகுதியின் கீழ் இணைக்கப்பட்டது.

சேலத்தில் 7 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்த நிலையில், கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் முறையே அ.தி.மு.க-வின் செம்மலை மற்றும் வி. பன்னீர்செல்வம் வெற்றி பெற்று சேலம் மக்களவைத் தொகுதியை அ.தி.மு.க-வின் கோட்டையாக மாற்றினர்.

16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வி. பன்னீர்செல்வம் 5,56,546 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் செ. உமாராணி 2,88,936 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க-வின் சுதிஷ் 2,01,265 வாக்குகளைப் பிரித்து தி.மு.க-வுக்குக் கடும் நெருக்கடியைத் தந்தார். காங்கிரஸ் கட்சியின் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் வெறும் 46,477 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தார்.

16வது மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் 76.73 சதவிகிதம் மக்கள் வாக்களித்துள்ளனர்.
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626