நீதிமன்றத்தில் சந்திக்கலாம் - பெரியார் விவகாரத்தில் ரஜினிக்கு கி.வீரமணி பதில்

நீதிமன்றத்தில் சந்திக்கலாம் - பெரியார் விவகாரத்தில் ரஜினிக்கு கி.வீரமணி பதில்
கி.வீரமணி
  • Share this:
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பேசிய கருத்திற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக செயல்படுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேலி கூத்தாக உள்ளதாக தெரிவித்த அவர், காவல் துறை அதிகாரிகளுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருவதாகவும், ஆனால் பாஜகவினருக்கு மட்டும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.


ரஜினி துக்ளக் விழாவில் பேசியது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என கூறினார். புதிய கல்வி கொள்கை குறித்து குறிப்பிட்ட அவர், புதிய கல்வி கொள்கை மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன்னதாகவே தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர்.

சமஸ்கிருதத்தினை திணிக்கும் வகையில் மத்திய அரசின் கொள்கை உள்ளது என கூறினார். மேலும் நீட் தேர்வினால் 8 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நிலைகள் காணப்படுகிறது. நீட் தேர்வினால் கிராம புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

First published: January 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading