காதலர் தினத்தன்று கள்ளக் காதலனுடன் உறவில் இருந்த மனைவி: இருவரையும் சரமாரியாக வெட்டிய கணவர்

காதலர் தினத்தன்று கள்ளக் காதலனுடன் உறவில் இருந்த மனைவி: இருவரையும் சரமாரியாக வெட்டிய கணவர்
மாதிரி படம்
  • News18
  • Last Updated: February 15, 2020, 3:59 PM IST
  • Share this:
காதலர் தினத்தன்று ஆண் நண்பரின் வீட்டிற்கு சென்று தனிமையில் இருந்த மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியும் அவரது ஆண் நண்பரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரகாஷ். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், பிரகாஷ்-பிரியா தம்பதியின் வீட்டுக்கு பால் வியாபாரி சின்னதுரை என்பவர் தினமும் பால் ஊற்றி வந்துள்ளார். தினமும் காலையும் மாலையும் பால் வியாபாரி சின்னதுரை வீட்டுக்கு வந்து சென்றதில், பிரியாவுக்கும் அவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில், பால் வியாபாரி சின்னதுரை, தனது மனைவி பிரியாவின் கள்ளக்காதலராக மாறியதைக் கண்டுபிடித்த கணவர் கண்டித்துள்ளார்.


சண்டை வெடித்ததால், பால் வியாபாரி சின்னதுரையிடம் பால் வாங்குவது நின்றுவிட்டது. சின்னதுரையும் பிரியாவை சந்திக்க வீட்டுக்கு வரவில்லை. ஆனால், மனைவி பிரியா, கணவருக்குத் தெரியாமல் சின்னதுரையை அவரது வீட்டிலேயே சென்று சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில், காதலர் தினமான வெள்ளிக்கிழமை, தனது கள்ளக்காதலர் சின்னதுரையை பார்க்க பிரியா அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். வெளியில் சென்றிருந்த பிரகாஷ் திடீரென வீட்டிற்குச் சென்ற போது மனைவி வீட்டில் இல்லாததால் அக்கம்பக்கம் விசாரித்துள்ளார்.

அப்போது, அவர்கள் சின்னதுரை வீட்டிற்கு பிரியா சென்றதைத் தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த பிரகாஷ், அரிவாளை எடுத்துக்கொண்டு சின்னதுரை வீட்டிற்குச் சென்றுள்ளார்.சுவர் ஏறிக் குதித்து சின்னதுரை வீட்டிற்குள் சென்று பார்த்தபோது இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதையடுத்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இருவரும் சத்தம்போட்டு அலறியுள்ளனர். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிப்போய் பிரகாஷை தடுத்து இருவரையும் காப்பாற்றி உள்ளனர்.

பின்னர், அவர்கள் இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கெங்கவல்லி போலீசாருக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். போலீசார் வருவதற்கு முன்னரே ரத்தக்கறையுடன், கெங்கவல்லி காவல் நிலையத்தில் பிரகாஷ் சரணடைந்தார். பிரகாஷை கைது செய்த போலீஸார், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see:
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்