சேலத்தில் முதியவர் உயிரோடு இருக்கும் போதே இறப்பு சான்றிதழ் வழங்கிய தனியார் மருத்துவமனை

பாலசுப்பிரமணியகுமார் உயிரோடு இருக்கும்போதே, அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, அவருக்கு இறப்புச் சான்றிதழ் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated: October 16, 2020, 6:48 PM IST
  • Share this:
சேலத்தில் 80 வயது முதியவர் ஒருவர், உயிரோடு இருக்கும் போதே குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்ட விவகாரத்தில் தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரணியகுமார் என்ற 80 வயது முதியவர் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியதால் அவரை வீட்டிற்கு கொண்டு வந்த குடும்பத்தினர் உயிரோடு இருக்கும் போதே குளிர்பதனப் பெட்டியில் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அறிந்த காவல்துறையினர், முதியவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.


Also read... உயிரோடு இருக்கும்போதே குளிர்பதன பெட்டிக்குள் 24 மணி நேரம் அடைத்து வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு...!

இதையடுத்து, முதியவரை குளிர் பதனப் பெட்டிக்குள் வைத்த அவரது மூத்த தம்பி சரவணன் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களது முதற்கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியகுமார் உயிரோடு இருக்கும்போதே, அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, அவருக்கு இறப்புச் சான்றிதழ் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading