சென்னையில் வருமானமின்றி ஊருக்குச் சென்ற இளைஞர்களுக்கு கைகொடுத்த ஆடு வளர்ப்பு..

சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் ஊரடங்கால் வேலை இழந்த இளைஞர்கள் பலர் மாற்றுத் தொழிலை கையில் எடுத்துள்ளனர்.

சென்னையில் வருமானமின்றி ஊருக்குச் சென்ற இளைஞர்களுக்கு கைகொடுத்த ஆடு வளர்ப்பு..
மாதிரிப் படம்
  • Share this:
கொரோனா பரவலத் தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்த நிலையில், தலைநகர் சென்னையில் பணி புரிந்த பல இளைஞர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டது. வருமானமின்றி சொந்த ஊர் சென்ற இளைஞர்கள் வருமானத்திற்கான வழியை தேட தொடங்கியுள்ளனர்.

வாழப்பாடியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கையில் எடுத்திருக்கும் தொழில் ஆடு வளர்ப்பு. வாழப்பாடியைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் ஊர் திரும்பினார். வருமானம் இல்லாத நிலையில் தற்போது ஆடு மற்றும் மாடு வளர்ப்பது தமக்கான பண நெருக்கடியை போக்கியுள்ளதாக கூறுகிறார்.

Also see: 

சென்னையில் வேலை பார்த்தவர்கள் மட்டுமல்லாது ஆங்காங்கே உள்ளூரிலேயே கட்டுமான தொழில் செய்தவர்களும் தற்போது முடங்கியுள்ளனர். அப்படி கொத்தனார் வேலை பார்த்த ராமச்சந்திரன், தன்னை காப்பாற்றியதும் ஆடு வளர்ப்பே என்று கூறுகிறார்.பணி உத்தரவாதம் இன்றி பல வேலைகளை பார்த்து வந்த இளைஞர்களுக்கும், கொரோனாவால் பணி இழந்தவர்களுக்கும் இந்த பகுதியில், ஆடு வளர்ப்பு துருப்புச்சீட்டாக அமைந்துள்ளது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading