சேலத்தில் காதலன் வீட்டு முன்பு உயிரைமாய்த்துக்கொண்ட காதலி

சேலம் மாவட்டத்தில் திருமணம் செய்வதாக காதலித்து விட்டு திடீரென கைவிட்ட காதலன் வீட்டு முன்பு காதலி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலத்தில் காதலன் வீட்டு முன்பு உயிரைமாய்த்துக்கொண்ட காதலி
கோப்புப் படம்
  • Share this:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயது அனிதா. 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்ற அனிதா பெற்றோருடன் வசித்து வந்தார்.

கெங்கவல்லியில் உள்ள டிஎன்பிஎஸ்சி தனியார் பயிற்சி மையத்திற்கு சென்றபோது அங்கு வந்த 27 வயதான விக்னேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.

2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தனது பெற்றோர் மூலம் அனிதாவை பெண் கேட்க வரப் போவதாக விக்னேஷ் கூறியுள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக திடீரென அனிதாவிடம் இருந்து விலகத் தொடங்கினார்.


விக்னேஷிடம் பேசுவதற்கான முயற்சிகள் பலனளிக்காத நிலையில் அவரது வீட்டிற்கே நேரடியாக சென்றார் அனிதா. அப்போது விக்னேஷின் பெற்றோர் அவரை வீட்டில் மறைத்து வைத்துக் கொண்டு இல்லை என்று கூறியதால் அனிதா கோபமடைந்தார்.

அதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கெங்கவல்லி காவல்நிலையத்தில் காதலனை சேர்த்து வைக்க கோரி புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் அனிதாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

விரக்தியடைந்த அனிதா, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் விக்னேஷ் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கையில் வைத்திருந்த விஷத்தை திடீரென அருந்தி மயங்கி விழுந்துள்ளார்.அங்கிருந்தவர்கள் அனிதாவை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அனிதா உயிரிழந்தார். அதன்பிறகு கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள விக்னேஷைத் தேடி வருகின்றனர்.

சமீபத்தில் திருச்சியில் மணப்பாறை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது உறவினர் இளைஞரைக் காதலித்து 6 மாதம் கருவுற்றார். இளைஞர் திருமணம் செய்ய முடியாது என மறுக்கவே காவல்துறையில் புகாரளித்தார்.

மேலும் படிக்க...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை : 2வது நாளாக இன்றும் தொடரவுள்ள சிபிஐ விசாரணை

ஆனால் காதலனோ, நீதிமன்றத்தை நாடியதால், விரக்தியடைந்த சிறுமி, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அந்த சம்பவத்தின் அதிர்ச்சி குறையும் முன்பு இளம்பெண் ஒருவரும் அதேபோல் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம், ஆனையம்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading