பெண் குழந்தையை தந்தையே விற்ற கொடூரம் - 2 பேர் கைது

Youtube Video

பச்சிளம் பெண் குழந்தையை, தந்தையே விற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • Share this:
  சேலம் நெத்திமேடு கரடு தெற்கு பகுதி காந்தி நகரை சேர்ந்தவர் விஜய் (32) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா (25) இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த நவ 1-ம் தேதி சத்யாவுக்கு, மேச்சேரி அரசு மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் அக்குழந்தையை அவரது வீடு அருகே உள்ள வெங்கடேசன் மனைவி கோமதி (34) என்பவரிடம் நவம்பர் 15-ம் தேதி 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். குழந்தையைக் காணாமல் துடித்த சத்யா நவ 17-ம் தேதி அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் கோமதியை பிடித்து விசாரித்தனர். அப்போது ஈரோட்டை சேர்ந்த நிஷா (40) என்பவரிடம் விற்றது தெரிந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில் குழந்தை பவானியை சேர்ந்த சித்ரா (35) பாலாமணி (38) ஆகியோர் மூலம் பெங்களூரு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து, ஆந்திரா மாநிலம் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

  இதனால் குழந்தையை மீட்க அன்னதானப்பட்டி எஸ்.ஐ முரளி தலைமையில் தனிப்படை போலீசார் ஐதராபாத் சென்றுள்ளனர்.
  இந்த நிலையில் நிஷா, கோமதியை கைது செய்த போலீசார் தலைமறைவான விஜய், சித்ரா பாலாமணியை தேடி வருகின்றனர்.

  மேலும் படிக்க: பெரம்பலூர்: பட்டியலின சிறுவர்களை மலம் அல்ல வைத்த கிராமத்து இளைஞர்கள்: போராட்டத்தில் இறங்கிய பாதிக்கப்பட்டவர்கள்- மூவர் கைது...  ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே அன்னதானப்பட்டி பகுதியில் வாங்கிய கடனுக்காக தந்தையே தன் குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அதே பகுதியில் தந்தையே பெண் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: