• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முறைகேடு மூலம் வெற்றி பெற்றவர்கள் எப்படி நல்லது செய்வார்கள்: திமுக குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

முறைகேடு மூலம் வெற்றி பெற்றவர்கள் எப்படி நல்லது செய்வார்கள்: திமுக குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

அதிமுகவை ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கொண்ட கட்சி. அதனால்தான் ஜனநாயக முறைப்படி தங்களின் ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியதாகவும்  திமுக அராஜகத்தை பயன்படுத்தியும், முறைகேடு செய்தும் வெற்று பெற்றுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

  • Share this:
    உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற திமுக-வினர், மக்களுக்கு எப்படி சேவை செய்வார்கள் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் குறித்து , சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக முறைகேடு செய்ததாக சாடினார்.

    கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றியை இழந்தாலும் சேலம் மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாகவே வைத்துள்ளோம் என்றார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 3 சதவீதம் மட்டும்தான் என்றும், 45 தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்ததாகவும் கூறினார்.

    அதிமுகவை பொறுத்தவரை ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை கொண்ட கட்சி. அதனால்தான் ஜனநாயக முறைப்படி தங்களின் ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியதாகவும் ஆனால் திமுக அராஜகத்தை பயன்படுத்தியும், பணத்தை கொடுத்தும் முறைகேடு செய்தும் வெற்று பெற்றுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள்.. ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா


    பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள் என்றும் விமர்சித்தார்.ஜெயலலிதா இல்லாத நிலையிலும் நாம் 66 இடங்களை வென்றுள்ளோம், அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    கூட்டத்தில் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன்,

    சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், சித்ரா, மணி, ஜெய்சங்கரன், நல்லதம்பி, ஏற்காடு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், சேர்மன் அண்ணாதுரை, அதிமுக மாணவரணி ஏற்காடு ஒன்றிய செயலாளர் புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    மேலும் படிக்க: பொதுச்செயலாளர் முதல் சபதம் வரை.. அதிமுக-வை வசப்படுத்துவாரா சசிகலா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: