Home /News /tamil-nadu /

தலையில் குத்தப்பட்ட கத்தியுடன் சிகிச்சை வந்த இளைஞர் உயிர்பிழைத்த அதிசயம் - அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு

தலையில் குத்தப்பட்ட கத்தியுடன் சிகிச்சை வந்த இளைஞர் உயிர்பிழைத்த அதிசயம் - அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு

செளந்தரராஜன்

செளந்தரராஜன்

தலையில் குத்தப்பட்ட கத்தியுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்த இளைஞருக்கு 9 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்.

சேலம் அரசு மருத்துவமனைக்கு தலையில் குத்தப்பட்ட கத்தியுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்தவர் உயிர் பிழைத்த அதிசயம்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன் ( 23 வயது ) கடந்த 03.02.2022 அன்று இரவு 9.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் தலை மற்றும் வயிற்று பகுதியில் கூர்மையான கத்தியால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

Also Read: டூத் பேஸ்ட் என நினைத்து எலி மருந்தில் பல் துலக்கிய இளம்பெண்.. கரண்ட் கட்டானதால் நேர்ந்த துயரம்..

தலையில் குத்தப்பட்ட கத்தியுடன் ஆபத்தான நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அவருக்கு CT Scan மற்றும் ஆஞ்சியோகிராம் எடுத்ததில் அவரது இடது பக்க மண்டை ஓடு பிளந்து மூளை மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தியது தெரியவந்தது . உடனடியாக கல்லூரியின் டீன் மருத்துவர் வள்ளி சத்தியமூர்த்தி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது . அவரது ஆலோசனையின் பேரில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால் , துணை கண்காணிப்பாளர் மரு.பொன்.அராஜராஜன் , மருத்துவ அலுவலர் மரு.த.சம்பத்குமார் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டது . இக்குழுவின் பரிந்துரைபடி மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் மருத்துவர் சங்கர் தலைமையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை உதவி பேராசிரியர்கள் மரு.பழனிசாமி மரு.பிரகதீஸ் ஆகியோர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மூளைக்கு சேதாரம் ஏற்படாமல் வெற்றிகரமாக இந்த கூர்மையாக ஆயுதத்தை அகற்றினர்.

Also Read: சிக்னலில் நின்ற கார்.. காதல் ஜோடி அலறல் சத்தம் - கோவையில் நள்ளிரவில் பரபரப்பு

மயக்கவியல் துறைத்தலைவர் பேராசிரியர் மரு.சிவக்குமார் மேற்பார்வையில் மருத்துவர் ரமேஸ்  சிறப்பான சிகிச்சையை அளித்தார் . வயிற்று பகுதி மற்றும் சிறுநீர் பையில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது . இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள 9 மணி நேரம் தேவைப்பட்டது . அறுவை சிகிச்சைக்குபின் நோயாளி  ICU வார்டிற்கு மாற்றப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார் .

இந்த நிலையில் 1 மாத காலமாக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்ட பின் தற்பொழுது உடல்நலம் தேறி நேற்று ( 02.03.2022 ) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள ரூபாய் 15 லட்சம் செலவு ஆகும் எனவும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்த  டீன் வள்ளி,  இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவினர் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Salem, Youths

அடுத்த செய்தி