சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி கிராமம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 17 வயது மகள் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.இ கம்பியூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற மாணவி கடந்த 18ஆம் தேதி, வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகன் விஜயகுமார் (வயது 23) 17 வயது மாணவியுடன் நட்பாக பழகி வந்ததும், பின்னர் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து உறவினர் வீட்டில் தங்கியிருந்த இருவரையும் மீட்ட போலீசார் 17 வயது மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Must Read : பள்ளி மாணவனுடன் ரகசிய திருமணம்.. ஆசிரியை போக்சோவில் கைது
பின்னர் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.