மயானத்தில் 20 வருடங்களாக தனி ஆளாக பணியாற்றும் இளம் பெண்ணுக்கு இருசக்கர வாகனம் வழங்கிய இளைஞர்கள்..

மயானத்தில் வேலை பார்க்கும் பெண்

உடல் அடக்கம் செய்வதை தனது முழுநேர தொழிலாக்கி கொண்ட சீதா, கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக இதுவரை பல ஆயிரக்கணக்கான பிரேதங்களை இரவு பகல் என்று பாராமல் தனி ஒரு ஆளாய் நின்று குழி தோண்டி அடக்கம் செய்து, தேவையான சடங்குகளை செய்து சமூகத்தின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

  • Share this:
மயானத்தில் 20 வருடங்களாக தனி ஆளாக பணியாற்றும் பெண்ணுக்கு சொந்த செலவில் இருசக்கர வாகனத்தை இளைஞர்கள் ம் வழங்கிய நிலையில் தனக்கு, மாத ஊதியம் பெறும் வகையில், தமிழக அரசு உதவிட வேண்டுமென என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

சேலம் நான்கு ரோடு அருகே உள்ள டி.வி.எஸ் மயானத்தில் கடந்த பல ஆண்டாக தனியாளாக நின்று ஆயிரக்கணக்கான பிரேதங்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் சீதா. சேலம் அரிசிபாளையம் பகுதியில் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இளம் பெண்ணான சீதா குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையின் காரணமாகவும், அவரது பெற்றோர்கள் இறந்துவிட்ட காரணத்தாலும், எதிர்கால வாழ்க்கை பெரும் கேள்வி குறியாய் இருந்த நிலையில், பெற்றோரை இழந்து, வறுமையில் வாடிய சீதாவுக்கு, டிவிஎஸ் மயானம் அடைக்கலம் கொடுத்தது.

Also Read:   மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

உடல் அடக்கம் செய்வதை தனது முழுநேர தொழிலாக்கி கொண்ட சீதா, கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக இதுவரை பல ஆயிரக்கணக்கான பிரேதங்களை இரவு பகல் என்று பாராமல் தனி ஒரு ஆளாய் நின்று குழி தோண்டி அடக்கம் செய்து, தேவையான சடங்குகளை செய்து சமூகத்தின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
இறந்த உடல்களை அடக்கம் செய்யும் பணியில் கிடைக்கும் சொற்ப கூலியை கொண்டு சீதா தனது உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டார்.

இளம்பெண் சீதா


இறந்தவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கூட மயானத்துக்குள் அடி எடுத்து வைக்காத மரபை கடைபிடித்து வரும் சமூக சூழலில், சீதா சுடுகாட்டில் தனி ஒரு ஆளாக இருந்து, உடல் அடக்கம் செய்து  புரட்சி பெண் வரிசையில் இடம் பிடித்துள்ளதாகவே கருதும் சமூக ஆர்வலர்களால்,  மகளிர் தினம் உள்ளிட்ட நாட்களில் அவ்வப்போது பாராட்டி, கெளரவிக்கபட்டு வருகிறார் சீதா.

Also Read:   ஒரேநாளில் பெரும் கோடீஸ்வரர் ஆக மாறிய சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் - சொத்து மதிப்பு எவ்வளவு?

இந்த நிலையில் தினம்தோறும் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து வீட்டிற்கு சென்றும் மீண்டும் அங்கிருந்து இடுகாட்டிற்கு நடந்தே வருகிறார். இதனை அறிந்த இளைஞர்கள் சிலர் சீதாவிற்கு உதவிடும் நோக்கில் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கி அவருக்கு பரிசாக வழங்கினர். புதிய இருசக்கர வாகனத்தை பெற்ற சீதா மகிழ்ச்சியுடன் உலா வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சடலங்களை அடக்கம் செய்வற்காக அவர்கள் வழங்கும் சொற்ப வருமானத்தை வைத்து வாழ்ந்து வருவதாகவும்,  இது அன்றாட உணவிற்கு கூட போதவில்லை என்றும் வேதனை தெரிவிக்கும் சீதா, அரசு எங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் உதவி செய்து மாத வருமானம் வரும் வகையில் ஒரு பணியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும்,  இந்த மயானத்தில் மாநகராட்சி பணியாளராக என்னை நியமனம் செய்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்.
Published by:Arun
First published: