ஆத்தூர் அருகே வசிஷ்ட நதியின் கழிவு நீரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள துலக்கனூர் சுவேத நதியின் கழிவு நீரில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வசிஷ்ட நதியில் மிதந்து கொண்டிருந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனிக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இறந்தவர் 50 வயது மதிக்கதக்க பெண் என்பதும் உடலில் எந்த துணியும் இல்லாமல் நிர்வாண கோலத்தில் இருந்ததால் இந்த பெண்ணை யாராவது பாலியல் துன்புறுத்தல் செய்து அடித்து கொலை செய்து ஆற்றில் வீசிச் சென்றார்களா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர் எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இந்த பகுதிக்கு வந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வசிஷ்ட நதியில் 50 வயது மிக்க பெண் சடலம் நிர்வாண நிலையில் மிதந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.