ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

போதைக்கு அடிமையான கணவன்.. விரக்தியில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை - சங்ககிரியில் நடந்த துயரம்

போதைக்கு அடிமையான கணவன்.. விரக்தியில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை - சங்ககிரியில் நடந்த துயரம்

கார்த்திக் - பிரியா

கார்த்திக் - பிரியா

திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சங்ககிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சங்ககிரி அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் விரக்தியடைந்த புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.இதை பார்த்த கணவர் போலீசுக்கு பயந்து கழுத்தை அறுத்துக்கொண்டு மரத்தில் தூக்குபோட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33 ) , சொந்தமாக டிப்பர் லாரி வைத்து ஓட்டி வந்தார் . இவரது மனைவி பிரியா (வயது 27 ) . இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது . இருவரும் தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர் . கார்த்திக்கிற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது . இதனால் தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார் . பிரியா பலமுறை கண்டித்தும் கார்த்திக் குடிப்பழக்கத்தை கை விடவில்லை .

இந்நிலையில் புதன் கிழமை இரவும் கார்த்திக் வழக்கம்போல் போதையில் வீட்டிற்கு வந்துள்ளார் . இதனை பிரியா கண்டித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது . பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். நேற்று காலை எழுந்த கார்த்திக் அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார் . சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் மின் விசிறியில் பிரியா தூக்கிட்டு பிணமாக தொங்கினார் . இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வைகுந்தம் மாரியம்மன் கோயில் பகுதிக்கு சென்று தனது கழுத்தை அறுத்துக் கொண்டு பின்னர் அங்கு உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

Also Read:  திருமணமான மறுநாளே நகை பணத்துடன் மனைவி ஓட்டம் - புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

மனைவி தற்கொலை செய்து கொண்டதால் போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது . இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சங்ககிரி டிஎஸ்பி நல்லசிவம் , இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Also Read: அம்மா செண்டிமெண்ட்.. உதவித்தொகை டிராமா - மூதாட்டிகளை ஏமாற்றி நகைகளை சுருட்டிய பலே கொள்ளையன்

பின்னர் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது மனைவியும் தூக்கிட்டு பிணமாக தொங்குவது தெரியவந்தது . அவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் . தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட இச்சம்பவம் இருவரின் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

Published by:Ramprasath H
First published:

Tags: Beer, Commit suicide, Crime News, Husband Wife, Salem, Wine