அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை, கோவை, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வர்ணபுரி பகுதியில் உள்ள ஏ.வி.ஆர் நகை கடையில் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறு பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் ஆத்தூர் அருகே உடையார்பாளையத்தில் உள்ள ( AVR ) தனியார் நகை கடையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி பகுதியில் உள்ள நகை கடையிலும் சோதனை நடைபெறுகிறது.
Must Read : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
இதே போல் ஆத்தூர் வினாயகபுரத்தில் உள்ள (பூந்தமல்லியில் ஊரக வளர்ச்சித் துறை இஞ்சினியராக பணிபுரியும்) வரதராஜ பெருமாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Directorate of Vigilance and Anti-Corruption, DVAC, Salem, SP Velumani