கருணை அடிப்படையில் வாரிசு பணி நியமனம் செய்வதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி; மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மாநகராட்சியில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரி 288 நபர்கள் மனுக்கள் அளித்திருந்தனர்.

மாநகராட்சியில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரி 288 நபர்கள் மனுக்கள் அளித்திருந்தனர்.

  • Share this:
சேலம் மாநகராட்சியில் கருணை அடிப்படையில் வாரிசு பணி நியமனம் செய்வதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு சரய்தார்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கருணை அடிப்படையில் வாரிசு பணி நியமனம் செய்யக் கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வாரிசு பணி வேண்டி, விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்பணியை மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ் இன்று (19.7.2021) நேரில் ஆய்வு செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேலம் மாநகராட்சியில் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள், சுகாதாரம், துப்புரவு ஊழியர்கள் என ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் மூலம் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. மைய அலுவலகம் மூலம் நான்கு மண்டலங்களின் பணிகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இதனிடையே மாநகராட்சியில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரி 288 நபர்கள் மனுக்கள் அளித்திருந்தனர். இது தொடர்பாக சான்றிதழ் சரிபார்க்கும் போது கொண்டு வரப்படவேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல், மனுதாரர்களின் வீட்டு முகவரிக்கு பதிவு தபால் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also read: கொங்கு மண்டலத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர முயற்சிக்க வேண்டும் - அண்ணாமலைக்கு கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை!

அதனடிப்படையில் மனுதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் வகையில் , 19.7.2021 , 20.7.2021 , 22.7.2021 மற்றும் 23.7.2021 ஆகிய 4 நாட்களுக்கு தினந்தோறும் 80 நபர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கியது .

சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியில் கல்வித் தகுதிச்சான்று, ஜாதி சான்று, இருப்பிடச் சான்று, இறந்த பணியாளர்களின் இறப்புச் சான்று, வாரிசுச் சான்று, இதர வாரிசுகளின் ஆட்சேபணையின்மை சான்று, பிறப்புச் சான்று, நன்னடத்தைச் சான்று, உறுதிமொழி சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஒருங்கிணைந்த சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இவர்களின் கல்வித்தகுதிக்கேற்ப பணியிடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சான்றிதழ் சரிபார்க்கும் பணியை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் ( பணியமைப்பு )  என்.சாய் லட்சுமி, உதவி ஆணையாளர் திரு.ப. ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Published by:Esakki Raja
First published: