தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ளதால் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,
சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக, இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி
ஸ்டாலின் ஆத்தூர்
ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், சேலம் மக்களை நம்ப முடியாது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதியில் திமுக வை வெற்றி பெற செய்தீர்களா? ஏமாற்றி விட்டீர்கள் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலாவது வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
அதிமுக ஆட்சியில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசி மட்டும் போடப்பட்டது, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்றும், திமுக ஆட்சி அமைந்த 9 மாத காலத்தில் 10 கோடி தடுப்பூசி போடப்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அதிமுக, ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்றுள்ளனர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களாக சொல்கிறார், ஆட்சி கலைந்து விடுமென, அவர் போல கூவத்தூர் போய் ஆட்சியை பிடிக்கவில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்றார்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் காணவில்லையென சொல்லும் அவர், டேபிளுக்கு கீழே தேட வேண்டாம், மேலே தேடினால் இருப்பேன் என சூசகாமாக சாடினார்.
Must Read : ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு மாற திமுக தான் காரணம்... கராத்தே தியாகராஜன் பரபரப்பு தகவல்
ஒன்பது மாத கால ஆட்சியில் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதோடு, பெட்ரோல் விலையை மூன்று ரூபாயை குறைத்து மகளிர்க்கான இலவச பேருந்து வசதிகளை செய்து கொடுத்த தலைவர். விரைவில் மகளிர்க்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேசிய உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Read More : 270 அமாவாசை வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக முடியாது - ப.சிதம்பரம் பேச்சு
தொடர்ந்து சேலம் தாதகாப்பட்டி மற்றும் சேலம் கோட்டை மைதானத்திலும் பரப்புரை செய்தபோது இதேபோன்ற கருத்தை உதயநிதி ஸ்டாலின் வெளிப்படுத்தி உரையாற்றினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.