Home /News /tamil-nadu /

ஆத்தூர் ஆணைவாரி அருவியில் சிக்கிய குழந்தை, பெண் உட்பட 4 பேர் மீட்பு - பதைபதைக்கும் காட்சிகள்

ஆத்தூர் ஆணைவாரி அருவியில் சிக்கிய குழந்தை, பெண் உட்பட 4 பேர் மீட்பு - பதைபதைக்கும் காட்சிகள்

ஆணைவாரி அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆணைவாரி அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆணைவாரி அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டவர்களுள் இருவர் ஆற்றில் தவறி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே  உள்ள  ஆணைவாரி  நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிலர் சிக்கி கொண்டனர், அவர்கள் பாறை மீது ஏறி தப்பிக்க முயன்றபோது, இரண்டு இளைஞர்கள் ஆற்றில் தவறி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அதில், குழந்தையுடன் தாய் காப்பாற்றப்படும் அந்த காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கின்றன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல்  கிராமத்தையொட்டி கல்வராயன்மலை தொடரில் முட்டல் ஏரி  மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதை வனத்துறையினர்  சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர், படகு சவாரி  மற்றும்  நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி, வனப்பகுதியில்  பொழுது போக்கும் வகையில் குடில், பூங்கா, மற்றும் சிறுவர்கள்  விளையாட வசதிகள்  செய்யப்பட்டுள்ளன.

விடுமுறை  நாட்களில் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான  சுற்றுலா  பயணிகள்  வருகை  தருவார்கள், இன்நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால், ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர்.

அப்போது, கல்வராயன் மலை தொடர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த ஒரு பெண், குழந்தை உள்பட 5 பேர் சிக்கி கொண்டனர். அவர்கள் அங்கிருந்து தப்பிக்க நீர்வீழ்ச்சியின் இடது புறமாக உள்ள பாறை மீது ஏறியுள்ளனர்.

அப்போது பாறை வழுக்கி இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். பின்னர் அந்த இரண்டு வாலிபர்களும் நீச்சலடித்து கரை சேர்ந்து உயிர் பிழைத்துள்ளனர்,

மேலும், குழந்தையுடன் இருந்த பெண்ணை வனத் துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். இதை நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Must Read : நாளைக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இதனை தொடர்ந்து, அந்த வீடியோ வைரலாகி வருகிறது, இந்நிலையில், ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Flood, Salem

அடுத்த செய்தி