Home /News /tamil-nadu /

சேலம் கலெக்டர் அலுவலகம் முன் அடுத்தடுத்து இரு வேறு குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சேலம் கலெக்டர் அலுவலகம் முன் அடுத்தடுத்து இரு வேறு குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Salem Collctor Office | சேலம் மாவட்டத்தில்  இருவேறு பிரச்சினைகள் காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குடும்பத்தினர் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாளான திங்கட்கிழமைகளில் சேலத்தில் தீக்குளிப்பு முயற்சி சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியைச் சேர்ந்த விஜயா என்பவர் தனது வளர்ப்பு மகனுடன் தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர்.

கொரோனா தொற்றால் கணவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் கணவரின் சகோதரர் மற்றும் அவரது பிள்ளைகள் தனக்கு சேரவேண்டிய  சொத்தை அபகரிக்க முயல்வதாகவும், சிறுவன் என்றும் பாராமல் தனது மகனை அடித்து சித்ரவதை செய்வதாகவும் அவர் புகார் தெரிவித்தார். தனது மகனுடன் வறுமையில் வாடும் தனக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Also Read : தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அயோத்தியாபட்டணம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் நாகராஜன் என்பவர் தனது தாய்,மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அயோத்தியாபட்டணம் ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார்  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது குடும்பத்தினருக்கு  கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர்மீது புகார் கொடுக்கவிடாமல் தடுப்பதோடு அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் தன் மீது மோசடி புகார் கொடுத்துள்ளாதகாவும் நாகராஜன் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

தனது பிரச்னை குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தார்.  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து இரு வேறு குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published by:Vijay R
First published:

Tags: Salem

அடுத்த செய்தி