• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சேலம் அருகே அமைக்கப்பட்டு வரும் உலகின் உயரமான நந்தி சிலை

சேலம் அருகே அமைக்கப்பட்டு வரும் உலகின் உயரமான நந்தி சிலை

சேலம் அருகே அமைக்கப்பட்டு வரும் உலகின் உயரமான நந்தி சிலை

சேலம் அருகே அமைக்கப்பட்டு வரும் உலகின் உயரமான நந்தி சிலை

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே 45 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான நந்தி சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

  • Share this:
சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி  அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் உலகத்திலேயே மிக உயரமான நந்தி சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமிபூஜையுடன் கடந்த ஜனவரி மாதம்  நடைபெற்றது. வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சோ்ந்த ராஜவேல் என்பவர்,  சிவ பக்தா்களின் ஒத்துழைப்போடு தனது கிராமத்தில் இராஜலிங்கேஷ்வா் சிவன் ஆலயம் மற்றும் 45 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான நந்தி சிலை அமைக்கும் திட்டப் பணியை தொடங்கியுள்ளாா்.

மலேசியா நாட்டில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்தவரும்,  அதேபோல சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள உலகின் மிக உயரமான முருகன் சிலையை உருவாக்கி பக்தர்களின் கவனத்தை ஈர்த்தவருமான சிற்பி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் இந்த நந்தி சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது உயரமான இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு நந்தி வடிவில் கம்பி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நான்கு அடி உயரத்தில் ஒரு மாதிரி நந்தி உருவாக்கப்பட்டு அதன் பாகங்களை அளவெடுத்து பத்து மடங்கு அளவாக மாற்றி கம்பிகளை வளைத்து கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதுகுறித்து நந்தி சிலையை அமைத்து வரும் அருட்குரு ஸ்ரீ ராஜவேல் சுவாமி கூறுகையில், " வெள்ளாளகுண்டம் பகுதியில் உலகத்திலேயே பெரிய நந்தியாக இந்த  ' அதிகார நந்தி'  45 அடி உயரத்தில் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதற்கு முன்னதாக கேரள மாநிலம் பாலக்காடு அருகே நவகரை என்ற இடத்தில் முப்பத்தி ஒரு அடி உயரத்தில் நந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அதனை விஞ்சும் வகையிலும் சிவ பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலும் 45 அடி உயரத்தில் அதிகார நந்தி சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இதை உலக புகழ்பெற்ற ஸ்தபதி திருவாரூர் தியாகராஜர் அமைத்து வருகிறார்.

Also Read : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவாயில் சீரமைப்பு பணி - அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்த கோவில் அமைப்பதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன் சிவன் என்னுடைய கனவில் வந்து இந்தப் பகுதியில் பிரமாண்ட முறையில் தனக்கு கோயில் அமைக்குமாறு ஆணையிட்டார். அதன் அடிப்படையில் மிகவும் விறுவிறுப்பாக பக்தர்களின் ஒத்துழைப்போடு இந்த கோயிலை கட்டி வருகிறோம்.

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கம்பி கட்டும் பணிகள் முடிவுற்று சிமெண்ட் கலவை போடும் பணி துவங்க உள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணிகள் முழுமையாக  முடிவடைந்து பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திறக்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார். மேலும் உயரமான சிவன் சிலை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: