• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் வழக்கை தூசு தட்டும் காவல்துறை

ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் வழக்கை தூசு தட்டும் காவல்துறை

கனகராஜ்

கனகராஜ்

ஜெயலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக மறு விசாரணை தொடக்கம்

  • Share this:
ஆத்தூர் அருகே புறவழிச்சாலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் மர்ம மரணம் தொடர்பாக மறு விசாரணை தொடக்கம்.கனஜராஜ் உறவினர் வீட்டில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி  மாவட்டம்  கொடநாடு  எஸ்டேட்டில்  கடந்த 2017 ஆம்  ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி  கொள்ளை  முயற்சி  நடைபெற்றது. அப்போது  முக்கிய ஆவணங்களும், பொருட்களும்  கொள்ளை  அடிக்கப்பட்டன. மேலும், பணியில் இருந்த  காவலாளி  ஓம் பகதூர் (50) என்பவர்  கொலை  செய்யப்பட்டார். இந்தக் கொலை  மற்றும்  கொள்ளை  சம்பவத்தில்  சயன், கேரளத்தைச்  சேர்ந்த  சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ்  சாமி  மற்றும்  குட்டி  என்கிற  பிஜின்  ஆகியோர்  கைது செய்யப்பட்டனர்.

இதில்  முக்கிய  நபரான  ஜெயலலிதாவின்  முன்னாள்  கார் ஓட்டுநர்  கனகராஜ், சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அருகே  2017 ஏப்ரல் 28 ஆம்  தேதி இரவு  நடைபெற்ற  சாலை  விபத்தில் மரணம் அடைந்தார். இந்த வழக்கு விசாரணையை ஆத்தூர் நகர போலீஸார்  மேற்கொண்டனர்.  அப்போதைய சேலம்  சரக டி.ஐ.ஜி.யாக  இருந்த  செந்தில்குமார்,  கார்  ஓட்டுநர்  கனகராஜ்  சாலை  விபத்தில்  தான்  இறந்தார். அவர்  மது  அருந்தியிருந்தார்  என தெரிவித்திருந்தார்.

இந்த  மரணத்தில்  சந்தேகம்  இருப்பதாகவும், கனகராஜ் சாலை  விபத்தில்  இறக்கவில்லை  என்றும், கொலை  செய்யப்பட்டுள்ளார் எனவும்  ஓட்டுநர்  கனகராஜின்  சகோதரர்  தனபால்  உள்ளிட்ட  உறவினர்கள் தெரிவித்து  வந்தனர். இந்நிலையில்  கார்  ஓட்டுநர்  கனகராஜ்  மர்ம  மரணம் தொடர்பான  வழக்கில்  மேல்  விசாரணை  நடத்த சேலம்  மாவட்ட  போலீஸார் முடிவு  செய்தனர்.

இதனையடுத்து இன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடக்குகாடு காந்திநகர் பகுதியில் உள்ள கனகராஜீன் பெரியம்மா மகன் ரமேஷ் மற்றும் அவரது சித்ராவிடம் எஸ்,பி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: