• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 146 அடி உயரத்தில் சேலத்தில் முருகனுக்கு பிரம்மாண்ட சிலை..

146 அடி உயரத்தில் சேலத்தில் முருகனுக்கு பிரம்மாண்ட சிலை..

பிரம்மாண்ட முருகன் சிலை

பிரம்மாண்ட முருகன் சிலை

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட மிக பிரமாண்டமாக சேலத்தில் 146 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி முடிவுற்று வண்ணம் தீட்டப்பட்டு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

  • Share this:
உலகிலேயே மிக  உயரமான முருகன் சிலை வண்ணம் தீட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் கோவில் உள்ளது. அங்கு 140 அடி உயரத்தில் பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மலேசியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்த கோவிலில் தரிசனம் செய்து வருவார்கள். உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முருகன் கோயில் இதுவாகும்.இந்த நிலையில், சேலம் மாவட்டம்  சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடியை அடுத்து புத்திரகவுண்டன்பாளையத்தில்,  146 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலை நிறுவப்பட்டு வருகிறது.

இந்த சிலையை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த, ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர்  வடிவமைத்து வருகிறார்கள். ஸ்தபதி தியாகராஜன் திருவாரூரை சேர்ந்தவர்.  இவர் தலைமையில் மலேசியாவில் உள்ள முருகன் சிலையை விட பிரமாண்டமாக 146 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி சேலத்தில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read: ஜோதிடப்படி காதலிப்பவர்கள் பொதுவாகத் தோற்பதில்லையாம்...

சுமார் ஐந்து ஆண்டாகக் தினமும் 25 சிலை வடிவமைப்பு கலைஞர்கள் சிலையை வடிவமைக்கும் பணியைச் செய்து வருகின்றனர். தற்போது முழு உருவமும் அமைக்கப்பட்டு முழுமையாக வண்ணம் தீட்டும் பணியும் நிறைவடைந்தது. சிலையின் அருகே தற்போது ஒரு லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த லிப்ட் மூலம் பக்தர்கள் மேலே சென்று முருகன் சிலையின் கையில் உள்ள வேல் மீது பால் ஊற்றி அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த முருகன் சிலையை  அமைத்து வரும் முருக பக்தர்  ஸ்ரீதர் கூறுகையில்,"இந்த முருகன் சிலையைச் சாதனைக்காக நான் கட்டவில்லை. முருகப் பக்தர்களைத் திருப்திப்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டேன். தமிழ் கடவுளான முருகனை அனைத்து தரப்பினரும் அதிகளவில் நேசிக்கின்றனர். கட்சிப் பாகுபாடின்றி இந்த பணியை ஆன்மீகம் என்ற அடிப்படையில் செய்து வருகிறோம்,  இந்த சிலை கட்டுமானத்தை 2016ல் எனது தந்தை முத்து நடராஜன் தொடங்கினார்.  தற்போது இந்த சிலை அமைக்கும் பணி 99 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும்"  என்று தெரிவித்தார்.

Also Read:  Pournami: ஒவ்வொரு பெளர்ணமி கிழமைக்கும் ஒரு சிறப்பு உண்டு... என்ன தெரியுமா?

தற்போதே ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் இந்த சிலை விரைவில் திறக்கப்படவுள்ளதால், முருக பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: