ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோச்சிங் கிளாசில் படித்து வந்த காதல் மனைவி மீது சந்தேகம்... கழுத்து இறுக்கி கொன்ற சில்லி சிக்கன் கடைக்காரர்

கோச்சிங் கிளாசில் படித்து வந்த காதல் மனைவி மீது சந்தேகம்... கழுத்து இறுக்கி கொன்ற சில்லி சிக்கன் கடைக்காரர்

பி.எஸ்.சி, பி.எட் படித்துள்ள  சசிகலா, ஆசிரியர்  வேலைக்கு செல்ல தகுதிதேர்வு எழுதுவதற்காக கடந்த  சில மாதங்களாக கோச்சிங் கிளாஸ் சென்று வந்துள்ளார்.

பி.எஸ்.சி, பி.எட் படித்துள்ள  சசிகலா, ஆசிரியர்  வேலைக்கு செல்ல தகுதிதேர்வு எழுதுவதற்காக கடந்த  சில மாதங்களாக கோச்சிங் கிளாஸ் சென்று வந்துள்ளார்.

பி.எஸ்.சி, பி.எட் படித்துள்ள  சசிகலா, ஆசிரியர்  வேலைக்கு செல்ல தகுதிதேர்வு எழுதுவதற்காக கடந்த  சில மாதங்களாக கோச்சிங் கிளாஸ் சென்று வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சேலம்  மாவட்டம் ஆத்தூர் அருகே  நரசிங்கபுரம்  நகராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் சில்லி  சிக்கன் கடை நடத்தி  வருபவர் ஜெயக்குமார் (40). இவர் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த சசிகலா என்பவரை பத்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

இதனிடையே பி.எஸ்.சி, பி.எட் படித்துள்ள  சசிகலா, ஆசிரியர்  வேலைக்கு செல்ல தகுதிதேர்வு எழுதுவதற்காக கடந்த  சில மாதங்களாக கோச்சிங் கிளாஸ் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சசிகலா யாரிடமோ நீண்ட நேரம்  செல்போனில் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது கணவர்  ஜெயக்குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுதொடர்பாக  அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சசிகலா தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது  சடலத்துடன் ஜெயக்குமார் தனது சொந்த ஊரான கோவிந்தராஜபாளையத்திற்கு சென்றுள்ளார் .

இதுகுறித்து தகவலறிந்த ஊர்மக்கள் அங்கு  திரண்டனர், அப்போது  சசிகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை உறவினர்களுடன் சேர்ந்து வாடகை காரில் இங்கு கொண்டு வந்து  விட்டோம். அடக்கம்  செய்ய  ஏற்பாடு  செய்திருக்கிறோம்  என  ஊர்மக்களிடம் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Also read... மண்வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு: 420 கி.மீ சைக்கிளில் பயணித்து கோவை வந்த குழுவினர்

இதையடுத்து சந்தேகமடைந்த ஊர் மக்கள் தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் உள்ள சசிகலாவின் தாய் குப்பாயி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை  கேட்டு  அதிர்ச்சியடைந்த சசிகலாவின் குடும்பத்தினர் கோவிந்த ராஜபாளையத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சசிகலாவின்  சாவில் சந்தேகம் இருப்பதாக குப்பாயி ஆத்தூர் போலீசில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சசிகலாவின்  சடலத்தை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . இதனிடையே  வீட்டில்  இருந்த ஜெயக்குமார் திடீரென தலைமறைவானார். இதனையடுத்து போலீசார் மர்மச்சாவு  என  வழக்குப் பதிவு செய்து விசாரணை  நடத்தினர் .

பிரேத பரிசோதனை முடிந்த பின்பு நேற்று முன்தினம் சசிகலாவின்  சடலத்தை  உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முயன்றபோது  சாவிற்கு காரணமான ஜெயக்குமாரை கைது செய்யக்கோரி திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  போலீசார்  பிரேத  பரிசோதனை அறிக்கை வந்தபின் உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்து  அவர்களை சமாதானப்படுத்தினார்கள், இதையேற்ற  உறவினர்கள் சசிகலாவின் சடலத்தை பெற்று கொண்டு  சசிகலாவின் சொந்த ஊரான சிறுவாச்சூரில் அடக்கம் செய்தனர்.

இதனிடையே  ஜெயக்குமார்  தலைமறைவானதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதே  பகுதியில் பதுங்கி  இருந்த ஜெயக்குமாரை பிடித்து காவல்நிலையம்  அழைத்து சென்ற போலீசார் அவர்களது பாணியில் விசாரணை மேற்கொண்டதில் சசிகலாவை கொலை செய்ததை ஜெயக்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ஜெயக்குமாரும், சசிகலாவும்  அரசு கல்லூரியில் படித்த போது காதலித்துள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு  முன்பு இருவரும் திருமணம் செய்து  கொண்டனர். இவர்களது காதல் திருமணம் சசிகலாவின்  பெற்றோருக்கு பிடிக்காததால், அவர்கள் இவர்களுடன் நெருக்கமாக இல்லை  திருமணம்  செய்து  கொண்டதில் இருந்தே இருவருக்கும்  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விநாயகாபுரம் பகுதியில் ஜெயக்குமார் சில்லி  சிக்கன் கடை வைத்துள்ளார் .

மனைவியின் நடத்தையில் ஜெயக்குமாருக்கு சந்தேகம்  ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் கடந்த  2  நாட்களுக்கு முன் இரவு மீண்டும் ஏற்பட்ட  தகராறில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அருகே கிடந்த கயிற்றை  எடுத்து சசிகலாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் . பின்னர்  அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளதாக அவர் அளித்த வாக்குமூலம் குறித்து  போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சசிகலாவின்  சடலத்தை  போலீசுக்கு தெரியாமல் எரிக்க  முயன்ற போது ஜெயக்குமாருக்கு உதவியாக இருந்த அவரது  பெரியப்பா செல்வராஜ் ( 55 ) என்பவரையும்  போலீசார் கைது  செய்தனர். நடத்தையில்  சந்தேகப்பட்டு  கணவனே  காதல்  மனைவியை  கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Esakki Raja
First published:

Tags: Crime News