முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சேலத்தில் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு வினோதமான அனுபவம்!

சேலத்தில் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு வினோதமான அனுபவம்!

சேலத்தில் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு வினோதமான அனுபவம்!

சேலத்தில் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு வினோதமான அனுபவம்!

சேலத்தில் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு வினோதமான அனுபவம் கிடைத்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

தீபாவளி என்றாலே புது படங்கள் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரிக்கும். கடந்தாண்டு கொரோனா தொற்றால் தீபாவளிக்கு திரையரங்கில் எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால் இந்தாண்டு அப்படியில்லை கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து, திரையரங்குகளில் நூறு சதவீத பார்வையாளர்களை கொண்டு திரையிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளது. நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை சிவா இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழகத்தில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்துள்ள திரைப்படம் 'எனிமி'. இதில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் திரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படமும் தீபாவளியையொட்டி இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சேலத்தில் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு வினோதமான அனுபவம் கிடைத்துள்ளது.

அதாவது, முதலில் படத்தின் இரண்டாம் பாதி திரையிடப்பட்ட நிலையில், அதை முதல் பாதி என நினைத்து முழுதாக பார்த்து முடித்த ரசிகர்கள் இறுதியில் இடைவேளை வர வேண்டிய நேரத்தில் படத்தின் இறுதி டைட்டில் கார்டு, வந்ததை தொடர்ந்து, அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, ரசிகர்கள் கூச்சலிட்டு தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் காவல்துறையினரை வைத்து அவர்களை அப்புறப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Actor Arya, Actor vishal, News On Instagram, Salem