நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என பாமக உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் பெரிய மாவட்டமாக இருப்பதாகவும், இதனை இரண்டாக பிரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
Also read: ஒவ்வொரு முறையும், சொல்லிக்கொண்டிருக்க முடியாது.. அமைச்சர்கள், எம்எல்ஏக்களை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்!
மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, அந்தியூர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளை உள்ளடக்கி மேட்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதிக பரப்பளவு கொண்ட மேட்டூரில் இருந்து சேலத்திற்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆவதாக தெரிவித்த பாமக உறுப்பினர் சதாசிவம், நிர்வாக வசதிக்காக மேட்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.