முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Lockdown | மீண்டும் முழு ஊரடங்கு வரும் என்று தாயக்கட்டை உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு பொருட்களை விற்பனைக்கு வாங்கி குவித்துள்ள வியாபாரிகள்...

Lockdown | மீண்டும் முழு ஊரடங்கு வரும் என்று தாயக்கட்டை உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு பொருட்களை விற்பனைக்கு வாங்கி குவித்துள்ள வியாபாரிகள்...

பாரம்பரிய விளையாட்டு பொருட்களை விற்கும் வியாபாரிகள்

பாரம்பரிய விளையாட்டு பொருட்களை விற்கும் வியாபாரிகள்

ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததால் மீண்டும் பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க  தமிழகத்தில் பல்வேறு  கட்டுபாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய ஆட்சி அமைந்தவுடன் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

ஏற்கனவே 2020 -ஆம் ஆண்டு தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, அமுல்படுத்தப்பட்ட  ஊரடங்கால், சுற்றுலா தலங்கள், பூங்கா உள்ளிட்டவை மூடப்பட்டன. வெளியே வருபவர்களிடம் போலீசார் கெடுபிடி காட்டியதால்,  மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மூடலால், தொழிலாளர்கள், மாணவ, மாணவியர், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் வீடுகளில் முடங்கினர்.

அப்போது வீட்டிற்கு உள்ளேயே பொழுதை போக்க, தாயக்கட்டை, பல்லாங்குழி, சீட்டாட்டம், செஸ் போர்டு, கேரம் போர்டு, பட்டம், பரமபதம் ஆகியவற்றில் மக்கள் ஈடுபட்டதால் அதன் விற்பனை சுறுசுறுப்படைந்தது. கடந்த ஆண்டு இப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட அதன் விலையை வியாபாரிகள் உயர்த்தினர். இருப்பினும், மக்கள் தங்கள் குழந்தைகளின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வாங்கி கொடுத்து விளையாட செய்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அனைவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் முடிவுற்றதாலும், இரவு நேர ஊரடங்கு காரணமாகவும் தற்போது மீண்டும்  குழந்தைகள்  பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட தொடங்கிவிட்டனர். பலரது வீடுகளில் தற்போது தாயக்கட்டைகள் உருளும் சத்தம் கேட்க துவங்கியுள்ளது.

தொடர்ந்து செல்போண்களில் கேம் விளையாடினால் கண் எரிச்சல், சோர்வு போன்றவை ஏற்படுவதாகவும், இது போன்ற விளையாட்டுகளால் உற்சாகம் ஏற்படுவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மீண்டும் நினைவுபடுத்துவதோடு, செல்போனில் மூழ்கியிருந்தவர்களுக்கு ரிலாக்ஸ் கொடுக்க வைப்பதற்காக இந்த விளையாட்டுகளை விளையாட சொல்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு பாரம்பரிய  விளையாட்டும் வாழ்க்கையை கற்றுகொடுக்கும் வகையில் இருக்கிறது. விரல், கை,  உடல் அசைவுகள் உடற்பயிற்சியாக, பிசியோ தெரபி போன்று செயல்பட்டு நரம்புகளை ஆரோக்கியமாக. வைத்திருக்க உதவுகிறது. எனவே இளம் தலைமுறையினருக்கு, அந்த விளையாட்டை கற்றுக் கொடுப்பதாக பெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க... கொரோனாவால் பாதித்தோருக்கு இல்லம் தேடி வரும் உணவு... உதவிக்கரம் நீட்டும் சென்னை வாசிகள்...

இதனிடையே தற்போது மீண்டும் ஊரடங்கு அமுலாகும் என்ற எதிர்பார்ப்பில்  வியாபாரிகள் அதிக அளவில் தாயம், கேரம் போர்டு, செஸ் போர்டு, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை வாங்கி குவித்துள்ளனர். குறிப்பாக சேலம்  மாநகர் செவ்வாய்பேட்டை, கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் வியாபாரம் தீவிரமடைந்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Night Curfew, Salem