Exclusive: கழிவுநீர் குட்டையான ஏரி: அடையாளத்தை இழந்து வரும் ‘ஏழைகளின் ஊட்டி’ ஏற்காடு..

‘ஏழைகளின் ஊட்டி’ ஏற்காடு

அரசு அதிகாரிகள் உரிய முறையில் பராமரிக்காமல் விட்டதால் ஏற்காடு மலைப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புகளின் கழிவுநீர் நேரடியாக இந்த ஏரியில் கலக்கிறது.

 • Share this:
  ஏற்காட்டின் தனி அடையாளமாக விளங்கும் படகு இல்ல ஏரி தற்போது கழிவுநீர் குட்டையாக மாறி உள்ளது. இதை மீட்டெடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஏற்காடு மக்களும், சுற்றுலாப் பயணிகளும் உள்ளனர்.

  ஏழைகளின் ஊட்டி என அனைவராலும் அழைக்கப்படும் ஏற்காடு, தற்போது பெயரளவில் மட்டுமே ஏழைகளின் ஊட்டி ஆக இருக்கிறது. ஏனெனில் ஏற்காட்டின் தனி அடையாளமாக விளங்கும் ஏரி தற்போது கழிவுநீர் குட்டையாகவே மாறியுள்ளது. ஏரியின் இந்த அவல நிலைக்கு சுற்றுலாத்துறையின் அலட்சியமே காரணம் என ஏற்காடு வாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, பக்கோடா பாயிண்ட், லேடி சீட், ஜென் சீட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி என பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தாலும் ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்யாமல் திரும்புவது இல்லை.  ஏற்காட்டின் தனி அடையாளமாகவே விளங்கும் இந்த ஏரி சுற்றுலா துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

  Also Read:  பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!

  இருப்பினும் அரசு அதிகாரிகள் உரிய முறையில் பராமரிக்காமல் விட்டதால் ஏற்காடு மலைப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புகளின் கழிவுநீர் நேரடியாக இந்த ஏரியில் கலக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த அவல நிலையால் சுமார்  7 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி தற்போது 75 சதவிகிதம் ஆகாய தாமரையாலும் செடி கொடிகளாலும் மூடிவிட்டது.

  இதுகுறித்து ஏற்காடு வாழ் பொதுமக்கள் சேலம் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அண்மையில் புகார் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் அதிகாரிகள் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  ஆனால் ஏரியை தூய்மைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊரடங்கு காலத்தில் ஏரியை தூர் வாராமல் ஊரடங்கு முடிந்த பின்னர் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  Also Read:  சுயநினைவு திரும்பல; மூளை ஆபரேஷனுக்கு பிறகு அர்ச்சனாவின் நிலை என்ன? மகள் சாரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

  தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல துவங்கியுள்ளனர். ஆனால் தற்போது ஏரியின் நிலை என்னவோ மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏரியின் அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுவதால் ஏரியை காலதாமதமின்றி தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் எனவும், ஏரியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏற்காடு வாழ் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த ஏரி, படகு சவாரிக்கு மட்டுமில்லாமல் ஏரியில் இருந்து கிணறுகள் மூலம் ஏற்காட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஏரி மாசடைந்துள்ளதால் கழிவுநீர் கலந்த தண்ணீரையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி ஏரியை தூய்மைப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  செய்தியாளர் திருமலை,  சேலம்
  Published by:Arun
  First published: