Home /News /tamil-nadu /

சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் - சே.கு. தமிழரசன் கோரிக்கை

சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் - சே.கு. தமிழரசன் கோரிக்கை

சே.கு. தமிழரசன்

சே.கு. தமிழரசன்

Salem district : தமிழகம் முழுவதும் கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை மீட்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு. தமிழரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில், சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு. தமிழரசன் முதலமைச்சரை கேட்டுக்கொண்டார்.

    இந்திய குடியரசு கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சேலம் மரவனேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் சே.கு. தமிழரசன் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலை கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறினர்.

    அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த தமிழக முதல்வர் கூண்டுக்குள் இருக்கும் அம்பேத்கரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவலர்கள் அமைத்த இரும்புக் கூண்டை அகற்றி, அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

    Must Read : மகன்கள் கைவிட்டதால் மண்ணை உண்டு உயிர் வாழ்ந்த மூதாட்டி... வீடியோ வெளியான நிலையில் பூட்டை உடைத்து மீட்ட காவல்துறை!

    மேலும், தற்பொழுது தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை நடைபெற்றுவருகிறது. வரும் வாரத்தில் ஆதி திராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை அல்லது காவல்துறை மானிய கோரிக்கை ஆகிய ஏதாவது ஒன்றில் சாதிய ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றினால், அம்பேத்கருக்கு அவர் செலுத்துகின்ற மிகப்பெரிய காணிக்கையாக இருக்கும் என்று கூறினார்.

    செய்தியாளர் - திருமலை, சேலம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Salem, Tamilarasan

    அடுத்த செய்தி