Home /News /tamil-nadu /

சேலத்தில் பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

சேலத்தில் பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

Pocso Case : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரைக் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மூலப்புதூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 17 வயது சிறுமி அங்குள்ள அரசு  மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2  படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு  திடீரென வயிற்று  வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  மாணவியின் பெற்றோர் அருகே உள்ள மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அழைத்து  சென்றுள்ளனர்.

அப்போது மாணவி எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள்  மாணவியை பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதை கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி  அடைந்தனர்.

இது  குறித்து மாணவியிடம் விசாரித்த போது, உலிபுரம் பகுதியை  சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் சுரேஷ் (22) என்ற இளைஞரை  காதலித்து, நெருங்கி பழகியதும் தெரியவந்தது. இதையடுத்து  மாணவியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழரசி  நடத்திய விசாரணையில் சுரேஷ் மாணவியிடம் தவறாக பழகி கர்ப்பமாக்கியது தெரியவ்ந்தது.

Must Read : சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டலை சூறையாடிய திருநங்கைகள் - விழுப்புரத்தில் பரபரப்பு

இதனையடுத்து சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பமானதை மறைக்க மாணவி வயிற்று வலியால் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக நாடமாடிய சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: POCSO case, Salem, Youth arrested

அடுத்த செய்தி