• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்- சேலம் மாணவன் விஷமருந்தி தற்கொலை முயற்சி

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்- சேலம் மாணவன் விஷமருந்தி தற்கொலை முயற்சி

தற்கொலைக்கு முயன்ற மாணவன்

தற்கொலைக்கு முயன்ற மாணவன்

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதற்காக விஷமருந்தி மாணவன் தற்கொலைக்கு முயன்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
தலைவாசல் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவன் மதிப்பெண் குறைவாக வாங்கியதாக விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசனின் மகன் சுபாஷ் சந்திரபோஷ் (வயது20).  இவர் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி சேலம் சின்னதிருப்பதியில் உள்ள குமாராசாமிப்பட்டி ஜெய்ராம் பள்ளியில் நீட் தேர்வு எழுதியுள்ளார்.இந்த நிலையில் நேற்று மாலை நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சுபாஷ் சந்திரபோஷ் குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையறிந்த மாணவணின் பெற்றோர்கள் ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த சுபாஷ் சந்திரபோஷை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக மாணவன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: