• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரு வாரத்தில் பள்ளிகள் திறப்பு: நோய் தடுப்பு பணிகள் தீவிரம்!

ஒரு வாரத்தில் பள்ளிகள் திறப்பு: நோய் தடுப்பு பணிகள் தீவிரம்!

நோய் தடுப்பு பணி தீவிரம்

நோய் தடுப்பு பணி தீவிரம்

பள்ளிகள் நடைபெறும் நாட்களில் மாணவ , மாணவிகள் அவசியம் முகக்கவசம் அணிந்து வருவது , பள்ளி நுழைவு வாயிலில் சேனிடைசர் பயன்படுத்துவது , வெப்பமானி மூலம் பரிசோதனை செய்தல் ஆகியவற்றை முறையாக கடைபிடித்திட வேண்டும் என்று ஆய்வின்போது சேலம் மாநகராட்சி ஆணையர் கேட்டுகொண்டார்.

  • Share this:
    கொரோனா நோய் தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் ஒன்றாம் தேதி  பள்ளிகள் திறப்படவுள்ள நிலையில் பள்ளி வளாகங்களில்நோய் தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு பள்ளிகள் துவங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  பள்ளிகள் திறப்புக்கு ஒரு வாரத்துக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில்,  நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில், சேலம் மாநகரில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல் , கிருமி நாசினி மற்றும் கொசு மருந்து தெளித்தல் . வகுப்பறைகளில் மாணவ , மாணவியர்கள் பயன்படுத்தும் மேசைகள் மற்றும் இருக்கைகள் , ஆசிரியர்கள் பயன்படுத்தும் மேசைகள் , நாற்காலிகள் , கதவுகள் , சன்னல்கள் ஆகியவற்றிற்கு கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே சேலம் மாநகராட்சிக்குட்பட்ட வாகீஸ்வரி மேல்நிலைப் பள்ளி , நீலாம்பாள் மேல்நிலைப் பள்ளி , பழைய சூரமங்கலம் உயர்நிலைப் பள்ளிகளில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார் .

    பின்னர், பள்ளி வளாகங்களில் உள்ள குடிநீர் தொட்டிகள் , குடிநீர் குழாய்கள், மாணவ , மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் , இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் மற்றும் பிற பகுதிகளில் கிருமி நாசினி , கொசு மருந்து தெளித்தல் போன்ற பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார் .

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் பொன்முடி


    மாணவ , மாணவிகளின் நலன் கருதி வகுப்பறைகளில் உள்ள மின் விசிறி , மின் விளக்கு ஆகியவற்றை நன்கு பராமரித்திட வேண்டும். மேலும் கட்டிடங்களை பராமரித்து நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும் . அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் விடுதிகளில் மாணவ , மாணவிகள் தங்கும் அறைகள் , அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் , கழிவறைகள் , விடுதிகளில் உள்ள சமையற் கூடங்கள் ஆகியவற்றிற்கு கிருமி நாசினி தெளித்திட வேண்டும் என தெரிவித்தார்.



    மேலும் பள்ளிகள் நடைபெறும் நாட்களில் மாணவ , மாணவிகள் அவசியம் முகக்கவசம் அணிந்து வருவது , பள்ளி நுழைவு வாயிலில் சேனிடைசர் பயன்படுத்துவது , வெப்பமானி மூலம் பரிசோதனை செய்தல் ஆகியவற்றை முறையாக கடைபிடித்திட வேண்டும் என்றும் அறுவுத்திய அவர்,  வகுப்பறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்களை முறைபடுத்தி இருக்கைகளில் அமர்த்துவதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணித்திட வேண்டும் என்றும்  ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் .என்றும் கேட்டுகொண்டார்.

    மேலும் படிக்க: பிற்போக்குத்தனமும் குப்பைகளும் பாடத்தில் சேர்க்கப்படுகிறது: தமுஎகச கண்டனம்


    அரசால் அறிவிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சிப் பள்ளி நிர்வாகிகள் , தனியார் பள்ளி நிறுவனங்கள் கடைபிடித்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார் . ஆய்வின் போது மாநகர நல அலுவலர் மரு.யோகானந்த் மற்றும் சுகாதார அலுவலர் மணிகண்டன் , சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: