சேலம் டவுனில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நள்ளிரவில் தங்க நகை பட்டறையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நிக்கில் பட்டேல் என்பவர் சேலம் டவுனில் கடந்த 18 ஆண்டுகளாக தங்கத்தின் தரத்தை மதிப்பீடு செய்யும் பரிசோதனை பட்டறை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த முகமுடி கொள்ளையர்கள் லாக்கரில் இருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு பவுன் சுத்தத் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
Also Read: ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி.. சக்கரத்தில் சிக்கியதில் பலத்த காயம்
இதுகுறித்து தகவலறிந்த சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: அடிபம்பை அகற்றாமல் போடப்பட்ட தார் சாலை.. வைரலான போட்டோவால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
இதையடுத்து சிசிடிவியில் பதிவாகி இருந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். டவுன் காவல் நிலையம் அருகே ஏராளமான நகை கடைகள் அடுத்தடுத்து அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: திருமலை தமிழ்மணி ( சேலம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Gold Theft, Robbery, Salem