ராட்சத பைப்பை பார் ஆக மாற்றி மதுபிரியர்கள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்!

மது பிரியர்கள் அட்டகாசம்

பள்ளப்பட்டி காவல் நிலையத்தின் மிக அருகிலேயே  பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் சாலையில் திறந்த வெளி மது கூடமாக மாற்றியிருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

  • Share this:
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள , அரசுப் பேருந்து பணிமனை எதிரில் சாலையோரம் அடுக்கப்பட்டுள்ள ராட்சத சிமெண்ட் குழாய்களை  24 மணி நேரமும் இயங்கும் திறந்தவெளி ' பாராக'  மது குடிப்போர் மாற்றியிருப்பது,  அவ்வழியே செல்லும் பெண்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தர்மபுரி , நாமக்கல்,  ஈரோடு,  கோயம்புத்தூர்,  மதுரை , சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன . சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளில் செல்வதால் எப்போதும் இந்த பேருந்து நிலையத்தில் பரபரப்பாக மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள சாலையோரம் அரசு டாஸ்மாக் மது கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் உள்ள மதுக்கூடங்கள், கொரோனா பரவலை தடுக்க அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு உள்ளன. இதனால் சாலையின் ஓரத்திலேயே ஆங்காங்கே மது பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டிலை சாலையிலேயே வீசிச் செல்கின்றனர் .
மேலும் அந்த வழியே வரும் பெண்கள், குழந்தைகளை கேலி கிண்டல் செய்வதாக பொதுமக்களிடையே புகார் எழுந்து வருகிறது.

மேலும் படிங்க: தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் பலத்த காற்று - மீனவர்களுக்கு வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை


இந்த நிலையில் பேருந்து நிலையம் அருகே உள்ள  தமிழ்நாடு அரசு பேருந்து பணிமனை முன்பாக சாலை ஓரத்தில் மாநகராட்சி பணிக்காக ராட்சத சிமெண்ட் குழாய்கள் அடுக்கப்பட்டு உள்ளன.
அந்த குழாய்களில் உள்ளே அமர்ந்தும் வெளியே நின்றும் சர்வசாதாரணமாக பகலில் மற்றும் இரவில் குடிமகன்கள் மது குடித்துவிட்டு செல்லும் காட்சியை காணமுடிகிறது.

இதையும் படிங்க: ஆற்றில் குளித்த திமுக பிரமுகரை இழுத்து சென்ற முதலை.. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு


பள்ளப்பட்டி காவல் நிலையத்தின் மிக அருகிலேயே  பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் சாலையில் திறந்த வெளி மது கூடமாக மாற்றியிருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அருகருகிலேயே உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்றும், இது குறித்து சேலம் மாநகராட்சி நிர்வாகமும் காவல் துறையினரும் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய பேருந்து நிலையம் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பள்ளப்பட்டி போலீசாரிடம் கேட்டபோது, தற்போது சிமெண்ட் குழாய் அருகில் யாரும் செல்லாமல் இருப்பதற்காக முற்கள் போடப்பட்டுள்ளதோடு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Murugesh M
First published: