ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Yercaud: ஏற்காட்டிற்கு அணிவகுத்த நூற்றுக்கணக்கான வாகனங்கள்.. திணறிய காவல்துறை!

Yercaud: ஏற்காட்டிற்கு அணிவகுத்த நூற்றுக்கணக்கான வாகனங்கள்.. திணறிய காவல்துறை!

ஏற்காடு

ஏற்காடு

ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏற்காட்டிற்கு நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வந்ததால், தடுக்க முடியாமல் காவல்துறை திணறினர்..

கொரோனா  ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் தமிழக அரசு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு அவசியம் உள்ள நபர்கள் மட்டும் உரிய ஆதாரத்துடன் இ பாஸ் பெற்று செல்ல வேண்டுமென்று அறிவித்திருந்தது

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏற்காட்டிற்கு நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இவர்களை அடிவாரம் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும் கூட காவல்துறையினர் அமைத்துள்ள தடுப்பையும் மீறி கார்கள் ஏற்காடு நோக்கி செல்கின்றன இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் எந்த ஒரு அத்தியாவசியம் இன்றி இளைஞர்கள் பொழுதைக் கழிப்பதற்காக சென்று வருகின்றனர்.

Also Read:  சந்திர பிரியங்கா: புதுச்சேரியில் 40 வருடங்களுக்கு பின் அமைச்சராகியிருக்கும் 2வது பெண்!

இவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர், மேலும் மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பது சேலம் மாவட்டத்தில் மேலும் நோய்த்தொற்றை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்காடு அடிவாரம் பகுதியில் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த காவலர் வாகன சோதனை சாவடி  தற்பொழுது செயல்படாததால் நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் இருசக்கர சென்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

சேலம் செய்தியாளர் கோகுலக்கண்னன்

Published by:Arun
First published:

Tags: Lockdown, Salem, Tourist spots, Yercaud Constituency