• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சேலத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

சேலத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

ஊரங்கு கட்டுப்பாடுகள்

ஊரங்கு கட்டுப்பாடுகள்

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, திங்கட்கிழமை(இன்று) முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

  • Share this:
    சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதை கட்டுப்படுத்தும் வகையில், சேலம் மாநகர் எல்லைக்குள் செயல்படும் வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. குளிர்சாதனங்களை பயன்படுத்தவும், ஞாயிற்றுகிழமைகளில் கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீ பஜார், வீரபாண்டியார் நகர் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    ஊரக பகுதிகளான கொங்கணாபுரம், வீரகனூரில் வரும் 23ம் தேதி வரை வாரச்சந்தை செயல்பட அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்காடுக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதேபோல் வரும் 23ம் தேதி வரை மேட்டூர் அணை பூங்காவுக்கு செல்ல, பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: