காவலர் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரி முருகேசன்.. போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட உடல்

சேலம் வியாபாரி முருகேசன்

முருகேசன் மீது தாக்குதல் நடத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசனின் உடல், உடல் கூறு ஆய்வு முடிந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அடுத்து உள்ள பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் வாகன சோதனையின்போது எடப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பெரியசாமி அவர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தற்பொழுது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் உயிரிழந்த முருகேசனின் உடல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு நடைபெற்றது இதில் ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரங்கராஜ் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு முடிவடைந்து அவரின்உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

இதனையடுத்து முருகேசனின் சொந்த ஊரான எடப்பட்டி கொண்டுசெல்லப்பட்டது இது காவல்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் இருபுறமும் சென்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: