Home /News /tamil-nadu /

கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி டிரைவரை தீர்த்துக்கட்டிய க்ளீனர் - திடுக்கிடும் தகவல்

கள்ளக்காதல் விவகாரத்தில் லாரி டிரைவரை தீர்த்துக்கட்டிய க்ளீனர் - திடுக்கிடும் தகவல்

லாரி டிரைவர் கொலை

லாரி டிரைவர் கொலை

லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் 17 வயது சிறுவனை கைது செய்த போலீஸார் சேலத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேட்டூர் அருகே லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் அதே லாரியின் கிளீனரான இருந்த  17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் , மேட்டூர் அருகேயுள்ள புதூர் பள்ளிக்கூடம் பகுதியை சேர்ந்தவர் செல்லவேல் ( வயது 36 ) லாரி டிரைவரான இவருக்கு  திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 7 ம் தேதி இரவு 7.30 மணியளவில் , செல்லவேல் டூவீலரில் சென்றுள்ளார், மேல் காவிரி கிராஸ் பகுதியில் மேற்கு கரை கால்வாய் அருகே சென்ற போது , அவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள்  சென்று பார்த்த போது,  கண்ணிமைக்கும் நேரத்தில் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்  சென்றது தெரியவந்தது . இதையடுத்து , சடலத்தை கைப்பற்றி மேட்டூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

செல்லவேலுக்கு, மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி அழகம்மாள் ( 40 ) என்பவருடன் , ஓராண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதும், கணவரை பிரிந்த அழகம்மாள் , கடந்த 6 மாதத்திற்கு முன்பு , செல்லவேலுவுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Also Read: காதலனின் பிறப்புறுப்பை துண்டித்த யோகா ஆசிரியை..

கொலை சம்பவம் தொடர்பாக செல்லவேலின் கள்ளக்காதலி அழகம்மாளிடம் துருவி துருவி விசாரித்தனர். இதில் , திடுக்கிடும் தகவல் வெளியானது . அழகம்மாளுக்கு ஏற்கனவே சரவணன் , வேலு , ஆறுமுகம் , விக்கி என்ற 4 பேருடன் திருமணம் நடந்துள்ளது . இதில் சரவணனுடன் 3 குழந்தைகள் உள்ளனர் . விக்கியுடன் குடும்பம் நடத்தி வந்த அழகம்மாள் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லவேலுவுடன் ஏற்பட்ட பழக்கத்தால் , விக்கியை பிரிந்து வந்து செல்லவேலுவுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார் .

இதனிடையே செல்லவேலு ஓட்டி வந்த லாரியில் கிளீனராக பணியாற்றிய மேட்டூர் காவிரி கிராஸ் அருகே உள்ள குண்டுகல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் , அழகம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது . செல்லவேலு இல்லாத போது இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர் . தீபாவளிக்கு முதல் நாள் , அழகம்மாள் சிறுவனுடன் படுக்கையறையில் ஒன்றாக இருந்ததை செல்லவேல் நேரில் பார்த்து விட்டதால், இருவரையும் கண்டித்துள்ளார் . மேலும் உனது பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார் .

Also Read: பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய பெண் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

இதனையடுத்து தன்னை செல்லவேல் ஏதாவது செய்து விடுவாரோ என பயந்துபோன சிறுவன் , செல்லவேலை நோட்ட மிட்டு வழிமறித்து , கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.  17 வயது சிறுவனை , அவனது வீட்டில் சுற்றிவளைத்து கைது செய்த போலீசார், சிறுவனை சேலத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த கொலையில் மேலும் யாருக்கேனும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் , சிறுவனின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த வழக்கில் , இன்னும் சில நாட்களில் மேலும் ஓரிருவர் பிடிபடலாம்  என போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Arrest, Crime | குற்றச் செய்திகள், Death, Illegal affair, Illegal relationship, Murder, Police

அடுத்த செய்தி